You are here: Home / Updates / Sri Lanka: Minister of Labor pledges to make laws for domestic workers
Sri Lanka: Minister of Labor pledges to make laws for domestic workers

Sri Lanka: Minister of Labor pledges to make laws for domestic workers

Comments
by Fish Ip published Aug 13, 2021 05:39 PM
With over a decade's fight for a domestic workers law by the Domestic Workers Union (DWU), Hon Namal Siripala De Silva, Labour minister of Sri Lanka, has promised now to bring cabinet paper within 2 weeks time to legally protect domestic workers.

Details

(Roll down below for English)

ஊடக வெளியீடு
வீட்டுவேலை தொழிலாளர்களுக்கான சட்டங்களை உருவாக்க தொழில் அமைச்சர் உறுதிமொழி

வீட்டுவேலை தொழிலாளர் சங்கம் கடந்த 14 வருடங்களாக உள்நாட்டு வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கான சட்ட பாதுகாப்பை கோரி பல போராட்டங்களை செய்து வந்துள்ளது. வீட்டுவேலை தொழிலாளர் சங்கமாக தம்மை பதிவு செய்து கொள்வதற்கு முன்னர் இருந்தே இப்போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. பேராட்டங்கள் மட்டுமன்றி, தொழில் அமைச்சுக்களுடனும், எந்த அரசு பதவிக்கு வந்த போதும், தொடர்ந்தும் பேச்சுவார்தைகளை நடத்தியதற்கூடாக பல அழுத்தங்களை கொடுத்து வந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாத பேச்சுவார்த்தையின் இறுதியில், தொழில் அமைச்சு செயலாளர் வீட்டுவேலை தொழிலாளர் சங்கத்திற்கு இத் தொழிலாளர்களுக்கான சட்டங்களை கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிப்பதாக உறுதிமொழி அளித்தார். அதற்கமைவாக இரண்டாம் கட்ட பேச்சுவார்தை நேற்றைய தினம் (10.08.2021) தொழில் அமைச்சில் இடம் பெற்றது. இப் பேச்சுவார்தையின் பலனாக பின்வரும் சட்டங்களை கொண்டுவருவதற்கான அமைச்சரவை பத்திரத்தை இரண்டு வாரங்களுக்குள் கொண்டுவருவதாக தொழிலமைச்சர் வீட்டுவேலை தொழிலாளர் சங்கத்திற்கு உறுதிமொழி அளித்துள்ளார்.

1. சம்பள நிர்ணய சபை சட்டத்திற்குள் வீட்டுவேலையை உள்வாங்குதல்.
2. வீட்டுவேலை தொழிலாளர்களை நுPகுஇ நுவுகு சட்டத்திற்குள் உள்வாங்குதல்.
3. குறைந்தபட்ச சம்பள சட்டம் மற்றும் வரவு செலவு திட்ட கொடுப்பனவிற்குள் வீட்டுவேலை

தொழிலாளர்களை உள்வாங்குதல்.

மேற்கூறப்பட்ட சட்டங்கள் தொடர்பாகவே நேற்றய தினம் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
மேலும் வீட்டுவேலை தொழிலாளர் சங்கம் இதனை முழுமையான வெற்றியாக கருதவில்லை. இது எமக்கான முதல் படி வெற்றியாகும். இச் சட்ட நகல் பராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு இது சட்டமாக மாறும் வரைக்கும் எமது பேராட்டம் தொடர்ந்தும் நடக்கும் அமைச்சு மட்டத்திலான தொடர் அழுத்த செயற்பாடுகளையும் சங்கம் முன்னெடுக்கும்.

சத்தியவாணி சரசகோபால்
தலைவர்
வீட்டுவேலை தொழிலாளர் சங்கம்

English translated from Tamil:

11.08.2021
Media release

The Domestic Workers' Union has been waging a number of struggles for the past 14 years to demand legal protection for domestic workers. The struggle began long before it registered itself as a domestic workers' union. Not only protests, but also with the ministries of industry, has put a lot of pressure on any government that comes to power and continues to negotiate. At the end of the talks in December 2020, the Secretary of the Ministry of Labor promised to begin the preliminary work of bringing these laws to the Domestic Workers' Union. Accordingly, the second phase of talks was held at the Ministry of Labor yesterday (10.08.2021). As a result of these talks, the Minister of Labor has pledged to the Domestic Workers Union to bring in the Cabinet Memorandum within two weeks to enact the following laws.

1. Inclusion of domestic work within the Wages board ordinances
2. Inclusion of domestic workers in the EPF/ETF (Employees’ Trust Fund)
3. Enrollment of domestic workers in the minimum wage law and Gratuity.

An agreement was reached yesterday regarding the above laws.

And the Domestic Workers' Union did not consider it a complete success. This is the first step to success for us. The union will continue to press for a series of ministerial-level activities where our campaign will continue until a copy of the bill is sent to parliament and becomes law there.

Sathyapani Sarasagopal
President, Domestic Workers Union

 

 

Source: DWU

Story Type: News

blog comments powered by Disqus